சென்னை: தமிழகத்துக்கு ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை மத்திய பாஜக அரசு வழங்கியுள்ளது என்று மத்திய தகவல் மற்றும்ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
தென்மண்டல அளவிலான அகில இந்திய வானொலி நிலையங்களின் செயல்பாடுகள் தொடர்பானமாநாடு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர் களிடம் அமைச்சர் கூறியதாவது:
தென்னிந்திய அளவில் முதன்முதலாக சென்னையில் இன்று நடைபெற்ற அகில இந்திய வானொலி (ஆகாஷ் வாணி) செயல்பாடுகள் குறித்த மாநாட்டில் 53 வானொலி நிலையங்களைச் சேர்ந்த அதிகாரி கள் கலந்துகொண்டனர்.
‘எனது வாக்கு தேசத்துக்கானது’ என்ற எண்ணத்தில் முதல்முறை வாக்காளர் வாக்களிக்கவும், 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யவும் வானொலியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அகில இந்திய வானாலி நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ.2,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசை வேண்டுமென்றே தமிழக அரசு குறைசொல்லி வருகிறது. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தைவிட 2014 முதல் பாஜக ஆட்சிக்காலத்தில் இதுவரை 11 லட்சம்கோடி மதிப்பில் நலத்திட்டங்களை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இது 3 மடங்கு அதிகம்.
சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு 200 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இன்னமும் வழங்கவில்லை. மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களின் விரிவாக்கத்துக்கும் நிலம் கையகப்படுத்தி வழங்கவில்லை. சேலம்,ஓசூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறு கள் ஆராயப்படுகின்றன. குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்அமைக்க தாமதம் ஆனதற்கு தமிழகஅரசே காரணம். தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு பல திட்டங்களைக்கொடுத்துள்ளது. மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் பாகு பாடு காட்ட வில்லை.
நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படு கிறது. விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் தரப்படுகிறது. முத்ரா கடன் திட்டத்தால் தமிழ்நாடுதான் அதிகமாக பலன் அடைந்துள்ளது. நாடுமுழுவதும் 5 ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்படுகிறது. அதில் ஒன்று தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்களுக்குஸ்டிக்கர் ஒட்டும் வேலையைத்தான் திமுக அரசு செய்து கொண்டி ருக்கிறது. உதாரணத்துக்கு சத்தியமங்கலத்தில் மத்திய நெடுஞ்சாலைத் துறையால் ரூ.17 கோடி யில் கட்டப்பட்ட பாலத்துக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.