Chennai man arrested for smuggling Rs 180 crore worth of drugs to Madurai by train | ரயிலில் ரூ.180 கோடி போதைப்பொருள் மதுரைக்கு கடத்தி வந்த சென்னை நபர் கைது

மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷனில், கோடிக்கணக்கான மதிப்பு போதைப்பொருளை கொண்டு வந்த சென்னையைச் சேர்ந்தவரை, மத்திய போதைப்பொருள் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.

நேற்று முன்தினம் இரவு, சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பிள்ளமன் பிரகாஷ், 42, என்பவர் இரண்டு பைகளுடன் புறப்பட்டார்.

மதுரை ரயில்வே ஸ்டேஷனில் அதிகாரிகள் சோதனை செய்ததில், 10 பொட்டலங்களாக 15 கிலோ பவுடரும், 15 கிலோ திரவ வடிவிலான மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளும் அவரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, அவரை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

சிக்கிய நபர், சென்னையில் உள்ள வீட்டிலும் போதைப் பொருள் வைத்திருப்பதாக கூறினார். அங்கு அதிகாரிகள் செல்வதற்குள் குடும்பத்தினர் குப்பையில் போதை பொருளை வீசியது தெரிந்தது.

குப்பையில் இருந்து, 6 கிலோ எடை கொண்ட போதைப் பொருள் மீட்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட மொத்த போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு, 180 கோடி ரூபாயாகும்.

இதை, கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு யார் கொடுத்தனர் என விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னை, சாந்தோம் அருளாநந்தம் தெருவில் உள்ள, ஜாபர் சாதிக் வீட்டில், நேற்று முன்தினம், டில்லியில் வந்திருந்த மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்கள் பூட்டிக் கிடந்த வீட்டை திறந்ததும், நான்கு பூனைகளில் இரண்டு வெளியே ஓட்டம் பிடித்தன. மற்ற இரண்டு பூனைகள் பசியால் கத்தின.அதற்கு நேசக்கரம் நீட்டிய அதிகாரிகள், ‘கார் பார்க்கிங்’ பகுதியில், பாதுகாப்பான இடத்தில் விட்டுச்சென்று, பூனைகளுக்கு தேவையான பால், பிஸ்கெட் உள்ளிட்ட உணவு பொருட்களை வைத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.