சாம்ராஜ்நகர் : மலை மஹாதேஸ்வரா கோவில் உண்டியலில், 1.82 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
சாம்ராஜ்நகர், ஹனுாரில் உள்ள மலை மஹாதேஸ்வரா கோவில் வரலாற்று பிரசித்தி பெற்றது. கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கர்நாடகாவின் பணக்கார கோவில்களில் இதுவும் ஒன்று.
கடந்த 28 நாட்களுக்கு முன்பு, கோவில் உண்டியல் எண்ணப்பட்டது. 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான காணிக்கை வசூலாகியிருந்தது.
கோவில் உண்டியல் எண்ணும் பணி, நேற்று நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கிய பணிகள், இரவு 7:40 மணி வரை நடந்தது. 1 கோடியே 82 லட்சத்து, 33 ஆயிரத்து, 71 ரூபாய் காணிக்கை வசூலாகியிருந்தது. 41 கிராம் தங்கம், 1.200 கிலோ வெள்ளிப் பொருட்கள் இருந்தன.
வெளிநாட்டு நோட்டுகள், புழக்கத்தில் இல்லாத 2,000 ரூபாயின், 14 நோட்டுகள் உண்டியலில் போட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement