புதுடில்லி : நாடு முழுதும் 15 மாநிலங்களில், 56 ராஜ்யசபா எம்.பி.,க்கள் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதையொட்டி, அவற்றை நிரப்ப, ராஜ்யசபா தேர்தல் நடத்தப்பட்டது. இதில், 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, மூன்று மாநிலங்களில் 15 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில், 10 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றது.
இதன் வாயிலாக ராஜ்யசபாவில் பா.ஜ.,வின் பலம் 97 ஆகவும், தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம், 118 ஆகவும் அதிகரித்துள்ளது. ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் பெற 121 இடங்கள் தேவை என்ற பட்சத்தில், தற்போது மூன்று இடங்கள் மட்டுமே தே.ஜ., கூட்டணிக்கு குறைவாகஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement