A reward of Rs 10 lakh for any clue about the Bengaluru blasts | பெங்களூரு குண்டுவெடிப்பு பற்றி துப்பு தந்தால் ரூ.10 லட்சம் பரிசு

பெங்களூரு, ‘ராமேஸ்வரம் கபே’ குண்டுவெடிப்புக்கு காரணமான குற்றவாளியின் படத்தை வெளியிட்டுள்ள என்.ஐ.ஏ., ‘அவர் குறித்து துப்பு கொடுப்போருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு தரப்படும்’ என அறிவித்து உள்ளது.

கர்நாடகாவின் பெங்களூரு, புரூக்பீல்டில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கபே உணவகத்தில், கடந்த 1ம் தேதி மதியம் திடீரென குண்டு வெடித்தது; 10 பேர் படுகாயமடைந்தனர்.

சிரியா நாட்டில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்., அமைப்புக்கு, இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு பிரிவிடம், மாநில உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. ராமேஸ்வரம் கபே உணவகத்தில் நேற்று முன்தினம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஆய்வு நடத்தி, விசாரணையை தீவிரப்படுத்தினர்.

சம்பவம் நடந்த பகுதிகளை சுற்றியுள்ள ‘சிசிடிவி’ காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில், ஒரு இடத்தில் மட்டும் குண்டு வைத்த நபர் முகக் கவசத்தை கழற்றியுள்ளார். அந்த படத்தை நேற்று என்.ஐ.ஏ., வெளியிட்டது.

இது தொடர்பாக என்.ஐ.ஏ., வெளியிட்ட அறிக்கை:

இப்படத்தில் உள்ள நபர் பற்றி தகவல் கொடுத்தால், 10 லட்சம் ரூபாய் பரிசு தரப்படும். தகவல் கொடுப்போரின் விபரம் ரகசியமாக வைக்கப்படும். 080 – 29510900, 89042 41100 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். [email protected] என்ற இ – மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும், எஸ்.பி., – என்.ஐ.ஏ., மூன்றாவது மாடி, பி.எஸ்.என்.எல்., டெலிபோன் எக்சேஞ்ச், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு – 560 008 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.