சென்னை இன்னும் இரண்டு நாட்களுக்கு இயல்வை விடத் தமிழகத்தில் கடும் வெப்பம் நிலவும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”07-03-2024 முதல் 13-3-2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம். […]