நெல்லை மாவட்டம், வீரவநல்லூரைச் சேர்ந்தவர் பேச்சிதுரை. இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், இவரின் நண்பர் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சந்துருவுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். மதுபோதையில் இருவரும் வெள்ளங்குளி பகுதியில் தகராறு செய்துள்ளனர். பின்னர், நெல்லை – அம்பாசமுத்திரம் நெடுஞ்சாலையில் வெள்ளங்குளி பாலம் வேலை நடைபெறும் பகுதியில் சென்று கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுருந்த கட்டுமானத் தொழிலாளர்களிடம் தகராறு செய்தனர்.
இதனை அங்கு வேலை செய்து கொண்டிருந்த விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பேச்சித்துரை, சந்துரு ஆகிய இருவரும் கருப்பசாமியை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதனை தடுக்க முயன்ற வெங்கடேஷ் என்ற தொழிலாளியையும் அரிவாளால் வெட்டிவிட்டு இருவரும் பைக்கில் தப்பிச் சென்றனர்.
பின்னர், வெள்ளங்குளி வழியாக சென்ற இருவரும் திருப்புடைமருதூர் அருகில் முக்கூடலில் இருந்து வீரவநல்லூர் செல்லும் அரசுப் பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்தனர். இதனை தடுக்க முயன்ற பேருந்தின் டிரைவரையும் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். அப்போது உயிர் பிழைக்க ஓடிய டிரைவரை சுமார் 500 மீட்டர் தூரம் துரத்திச் சென்றுள்ளனர். இந்த தகவலறிந்த வீரவநல்லூர் காவல் நிலையக்தின் இரண்டு காவலர்கள் பைக்கில் குற்றவாளிகளை பிடிக்கச் சென்றுள்ளனர். தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் இருவரையும் மடக்கிப் பிடிக்க போலீஸார் முயன்றுள்ளனர்.
அப்போது காவலர் செந்தில்குமாரின் கையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில் காயமடைந்த காவலர் செந்தில்குமார், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், நெல்லையில் இருந்து தனிப்படை போலீஸார் வீரவநல்லூருக்கு விரைந்தனர். முக்கூடல் – திருப்புடைமருதூர் சாலையில் உள்ள வாழைத் தோட்டத்தின் அருகில் இருவரையும் தனிப்படை போலீஸார் பிடிக்க முயன்றனர்.
அப்போது போலீஸாரைக் கண்டதும் இருவரும் தப்பியோட முயன்றனர். இதனைத் தொடர்ந்து பேச்சித்துரையின் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதற்கிடையில் பேச்சித்துரையின் நண்பர் சந்துரு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். குண்டடி பட்டதில் காயமடைந்த ரெளடி பேச்சித்துரை நெல்லை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அவரின் காலில் இருந்து துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டது.
சிகிச்சை பெற்று வரும் காவலர் செந்தில்குமாரை மாவட்ட எஸ்.பி., சிலம்பரசன் நேரில் சந்தித்தார். தப்பியோடிய பேச்சிதுரையின் நண்பர் சந்துருவையும் தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். மதுபோதையில் கொலை செய்துவிட்டு தன்னை பிடிக்க முயன்ற போலீஸாரையும் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரெளடியை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY