வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சமையல் காஸ் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் அவரது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
மகளிர் தினத்தில் சமையல் காஸ் விலையை மேலும் 100 ரூபாய் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள குடும்பங்களின் நிதிச்சுமையை குறைக்கும். குடும்பங்களின் நல்வாழ்வுக்கு ஆதரவாக இருப்பதுடன் ஆரோக்கியம் உறுதி செய்வதுடன் பெண்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
பெண்கள் எளிதாக வாழ வழி செய்யவும் , பெண்கள் அதிகாரம் உறுதி செய்வதும் எங்களின் நோக்கம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement