5th Test: England stumbles in the 2nd innings | 5வது டெஸ்ட்: 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி தடுமாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

தர்மசாலா: ஐந்தாவது டெஸ்டில் இந்திய அணி 477 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் பிறகு 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி 103 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்திய அணி 3 – 1 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது டெஸ்ட் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 218 ரன்கள் எடுத்தது. நேற்று (மார்ச் 08) இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 473 ரன் எடுத்து இருந்தது.

ஆண்டர்சன் சாதனை

3வது நாள் ஆட்டம் இன்று துவங்கிய சிறிது நேரத்தில் இந்திய அணி கூடுதலாக 4 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 477 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் சோயப் பஷீர் 5, ஆண்டர்சன், டாம் ஹார்ட்லி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இந்த போட்டியில் ஆண்டர்சன் 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற பெருமை பெற்றார். இந்திய அணி 259 ரன்கள் முன்னிலை பெற்றது.

அஸ்வின் அபாரம்

இதனையடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. ஆனால், அந்த அணி வீரர்களுக்கு இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தொல்லை கொடுத்தார். அவரது பந்து வீச்சில் கிராவ்லே ரன் எடுக்காமலும், டக்கட் 2 ரன்னிலும், போப் 19 ரன்னிலும், கேப்டன் ஸ்டோக்ஸ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பெயிர்ஸ்டவ் 39 ரன்னிலும் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்து 103 ரன்களை எடுத்து தடுமாறி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.