காபூல்,
ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 6 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரின் தெற்கே- தென்மேற்கு திசையில் 632 கி.மீ தொலைவில் பாகிஸ்தானையொட்டிய பலோசிஸ்தானின் நுஷ்கி பகுதியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததால் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நில அதிர்வு உணரப்பட்டதாகவும், எனினும், பெரிதாக சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த 17-ம் தேதி ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.