எம்ஜி மோட்டார் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் கூட்டணியில் முதல் எக்ஸெலார் எலக்ட்ரிக் எஸ்யூவி உட்பட பல்வேறு எதிர்கால திட்டங்கள் குறித்தான தகவல்களை வெளியிட உள்ளது.
இந்திய சந்தையில் மிகவும் வலுவான சந்தை பங்களிப்பை மேற்கொள்ள சீனாவின் SAIC குழுமத்தின் எம்ஜி மோட்டார் தனது சந்தையை விரிவுப்படுத்த புதிய எலக்ட்ரிக் வாகனங்களை ரூ.15 லட்சத்துக்கும் குறைவான விலையில் அடுத்தடுத்து வெளியிட திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் எம்ஜி எக்ஸெலார் இவி என்ற பெயரை பதிவு செய்துள்ள நிலையில், சீன சந்தையில் கிடைக்கின்ற யப் காரின் அடிப்படையில் 4 மீட்டருக்கு குறைந்த நீளம் 400 கிமீ முதல் 600 கிமீ வரையிலான ரேஞ்ச் வெளிப்படுத்தக்கூடிய எஸ்யூவி மாடலை நடப்பு வருடத்திலும் மற்றும் எம்பிவி எலக்ட்ரிக் மாடலை 2025 ஆம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இதுதவிர, பல்வேறு பீரீமியம் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர எம்ஜி மோட்டார் திட்டமிட்டு வருகின்றது. பல்வேறு முக்கிய அறிமுகங்கள் மற்றும் எதிர்கால தொழிற்சாலை விரிவாக்கம் பற்றிய திட்டங்களை நாளை நடைபெற உள்ள Drive Future என்ற டீசர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் எம்ஜி பதிவு செய்து வைத்துள்ள Excelor EV, Martiner, Minster, Wemblor EV, Aulder EV, Trudor EV, Waltor EV, Chester EV, Majestor ஆகிய பெயர்களை பதிவு செய்துள்ளது.