பெங்களூரு, : தேர்தல் நடத்தை விதிகளை மீறி, விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ எடை உள்ள 940 பைகள் கொண்ட ‘பாரத் அரிசி’யை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தும், ஆங்காங்கே தேர்தல் விதிமுறை மீறல்கள் நடந்து வருகின்றன.
இவற்றை தடுப்பதற்காக பல படைகளை மாநில தலைமை தேர்தல் அதிகாரி நியமித்துள்ளார்.
கோவிந்தராஜ் நகர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், பா.ஜ., சார்பில் மத்திய அரசின் ‘பாரத் அரிசி’ வினியோகம் செய்யப்படுவதாக, பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள், பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் உமேஷ் ஷெட்டி அலுவலகம் அருகில், அரிசி வினியோகிப்பதை தடுத்தனர். அப்போது அவருக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
‘தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், மத்திய பா.ஜ., அரசின் பாரத் அரிசியை வினியோகம் செய்யக்கூடாது’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, தலா 10 கிலோ எடை உள்ள 940 மூட்டைகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். அத்துடன், கோவிந்தராஜ் நகர் போலீசில், பறக்கும் படையினர் புகார் அளித்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement