17-வது ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் தேதியான நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளது. இதனையொட்டி பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளுக்கான புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. இனி வேக பந்து வீச்சாளர்கள் பவுலிங் செய்யும் ஒரு ஓவரில் 2 பவுன்சர்களை வீசலாம். இதற்கு முன்பு ஒரு பவுலர் ஒரு ஓவரில் ஒரு பவுன்சர் வீசுவதற்கு மட்டுமே அனுமதி கொடுக்கபட்டது. ஒரே ஓவரில் 2-வது பவுன்சரை வீசினால் அது ‘நோபால்’ என நடுவர் அறிவித்து விடுவார். இது சையத் முஸ்டாக் அலி போட்டிகளில் இந்த ஆண்டு நடை முறைக்கு வந்தது. தற்போது நடைபெற போகும் இந்த ஐபிஎல் தொடரிலும் பிசிசிஐ இதை அமல் படுத்தியுள்ளது.
அதே போல ஒரு பேட்ஸ்மேன் ஸ்டெம்பிங் ஆகும் போது மூன்றாம் நடுவர் அந்த ஸ்டெம்பிங்கை மட்டுமே சரிபார்ப்பார். ஆனால் தற்போது, முதலில் அவர் கேட்ச் ஆனாரா அதாவது அவரது பேட்டில் பந்து தொட்டுள்ளதா என மூன்றாம் நடுவர் சரிபார்ப்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதுவும் ஒரு நல்ல விதி தான் என ரசிகர்கள் மத்தியில் பேச்சுக்கள் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் போல, விளையாடும் அணிகள் வைடு, நோ பால்களையும் ரிவ்யூ (Review) செய்யலாம் எனவும் ஒரு இன்னிங்சில் ஒரு அணி 2 முறை ரிவ்யூ எடுத்துக்கொள்ளலாம் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் ஐசிசி (ICC) புதியதாக அறிமுகப்படுத்திய Stop Clock முறை ஐபிஎல் தொடரில் அமல்படுத்தவில்லை எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அதேபோல் மூன்றாவது தொலைக்காட்சி நடுவருக்கு உதவும் வகையிலும், மைதானத்தில் இருப்பவர்கள் பார்க்கும் வகையிலும் புதிய காட்சி அமைப்புகள் ரீப்பிளே சிஸ்டத்தில் புகுத்தப்பட்டுள்ளன. இது பார்வையாளர்களுக்கும் சுவாரஸ்யமாக இருக்கும் அதேவேளையில் மூன்றாவது நடுவர் விரைவாக முடிவுகளை அறிவிக்கவும் வழிவகுக்கும். இந்த விதிகள் அனைத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் ஐபிஎல் போட்டியில் நடைமுறைக்கு வர இருக்கிறது.
ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. 5 முறை ஐபிஎல் சாம்பியன், நடப்பு சாம்பியன் சிஎஸ்கே இதுவரை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லாமல் முதல் கோப்பைகாக காத்திருக்கும் ஆர்சிபிஐ எதிர்கொள்கிறது. இம்முறையும் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற உத்வேகத்தில் தான் ஆர்சிபி அணி களமிறங்க இருக்கிறது. இப்போட்டியைக் காண ரசிகர்களும் ஆர்வமாக இருக்கின்றனர்.
மேலும் படிக்க | கேப்டன்ஷிப்பில் ரோகித் பெஸ்ட், தோனி ரெண்டாவது இடம் தான் – முன்னாள் சிஎஸ்கே வீரர்