ப்ளூடூத் வசதியுடன் களமிறங்கியிருக்கிற புதிய பைக் உங்களுக்கு தெரியுமா?

இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த பைக் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர். இந்த மாடல் பைக்குகள் அறிமுகமானதில் இருந்தே செம ஹிட் அடித்துவிட்ட நிலையில், இப்போது இந்த மாடல் பைக்குகளில் புதுப்புது அப்டேட்டுகளுடன் பஜாஜ் புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில், பல்சர் 150 மற்றும் பல்சர் 160 ஆகிய இரு பைக்குகளும் புளூடூத் இணைப்புடன் களமிறக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் களமிறங்கிய இந்த பைக் விற்பனையில் இதுவரை அமோகமாக இருக்கிறது. 

பல்சர் 150 மற்றும் பல்சர் 160 விலை

புதிய அம்சத்துடன் களமிறங்கியிருக்கும் பல்சர் 150 மற்றும் பல்சர் 160 பைக்குகளின் விலை கொஞ்சம் காஸ்டிலி தான். பல்சர் என்150 விலை ரூ.1.18 லட்சம் முதல் ரூ.1.24 லட்சம் வரையிலும், பல்சர் 160 மாடலின் விலை ரூ.1.31 லட்சத்தில் தொடங்கி ரூ.1.33 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

மொபைல் அழைப்புகளை டிஸ்பிளேவில் காட்டும்

பஜாஜ் நிறுவனம் இந்த இரண்டு பைக்குகளையும் புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்துள்ளது. அதன்படி  பல்சர் N150, பல்சர்N 160  அதாவது பைக்கை ஓட்டும்போது உங்களுக்கு  வரும் அழைப்புகளை  ஏற்கவும், நிராகரிக்கவும் உதவுகின்றது . இது மிகவும் பயனுள்ள அம்சமாகும். நமக்கு வரும் அழைப்பு டிஜிட்டல் எல்சிடி டிஸ்பிளே  மூலம் நாம் பார்த்துக்கொள்ளலாம். இடது கை சுவிட்ச் கியரில் உள்ள பட்டனைப் பயன்படுத்தி அழைப்புகளை ஏற்கவும் அல்லது நிராகரிக்கலாம்.

பல்சர் 150 மற்றும் பல்சர் 160 சிறப்பம்சங்கள்

மேலும், இந்த டிஸ்பிளேவில் தொலைபேசியின் பேட்டரி மற்றும் சிக்னல் காட்டுகிறது. இது தவிர, ஸ்பீடோமீட்டர், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், எரிபொருள் திறன் மற்றும் சராசரி மைலேஜ் ஆகியவற்றையும் பார்க்க முடியும். இரண்டு பைக்குகளிலும் நிறுவனம் எந்த இயந்திர மாற்றங்களையும் செய்யவில்லை, முன்பு போல் பல்சர் N150 ஆனது 149.6 cc திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் எஞ்சினைக் கொண்டுள்ளது, இது 14 திறன் மற்றும் 13.5 டார்க்கை உருவாக்குகிறது. பல்சர் N160 இல், நிறுவனம் 165 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சினை வழங்கியுள்ளது, இது 16 திறன் மற்றும் 14.65  டார்க்கை உருவாக்குகிறது. சராசரியான மைலேஜூம் கொடுப்பதால் இளைஞர்களின் விருப்ப தேர்வு பைக்காகவும் இந்த மாடல்கள் இருக்கின்றன.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.