இந்திய சந்தையில் மீண்டும் கார்களை உற்பத்தி செய்ய ஃபோர்டு இந்தியா திட்டமிட்டு வரும் நிலையில் பிரீமியம் எஸ்யூவி முதல் குறைந்த விலை எலக்ட்ரிக் கார் வரை தயாரிக்க செயல்திறன் மிக்க திட்டங்களை வகுத்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஃபோர்டின் எதிர்கால திட்டங்கள் மற்றும் முதலீடு தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் விவாதிக்க ஃபோர்டு மோட்டார் தலைவர், சர்வதேச சந்தைகள் குழு, கே ஹார்ட் இந்தியா வரவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Ford EV plan
இந்தியாவில் மீண்டும் ஃபோர்டு முதலீடு செய்வதற்கான முயற்சிகள் ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் எண்டோவர் எஸ்யூவி, ரேஞ்சர் பிக்கப் டிரக் உள்ளிட்ட மாடல்கள் இந்தியாவிற்கு இந்நிறுவனத்தால் ஆய்வுகளுக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகின்றது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் 3000-5000 நபர்களுக்கு நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை வழங்கும் வகையில் தொழிற்சாலையை மீண்டும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு மற்றும் போர்டுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
இந்தியாவில் பட்ஜெட் விலை எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க ஃபோர்டு ஆய்வு செய்து வருவதாகவும், முன்பாக விற்பனையில் கிடைத்து வந்த எண்டோவர் எஸ்யூவி மற்றும் தயாரிப்பு பணியில் இருந்த மாடல்களுக்கான காப்புரிமை கோரியுள்ளது.
வரும் வாரங்களில் ஃபோர்டு இந்தியாவில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் பற்றி உறுதியான அறிவிப்புகள் வெளியிடலாம்.