மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை (14.03.2024 ) அன்று முகாம் அலுவலகத்தில், ஜெர்மனியில் நடைபெற்ற சமையல் ஒலிம்பிக் – 2024 போட்டியில் (Culinary Olympics) இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற சென்னையை சேர்ந்த மாணவி ஸ்ரேயா அனீஸ் அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
உடன் சென்னைஸ் அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் தலைவர் திரு.பூமிநாதன், தலைமைச் செயல் அலுவலர் திருமதி.கவிதா நந்தகுமார் மற்றும் சமையல் கலை நிபுணர் திரு. கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.