வாட்ஸ் ஆப் குரூப் விபரீத்தை சொல்லும் படம்

வாட்ஸ் ஆப் குரூப் என்பது இப்போதைய டிரண்டிங். குடும்பத்தினர், நண்பர்கள், ஒரே இடத்தில் பணியாற்றுகிறவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது நான்கைந்து வாட்ஸ் அப் குரூபிலாவது இருக்கிறார்கள். இதனால் பல நன்மைகள் இருந்தாலும் சில விபரீதங்களும் இருக்கிறது. அதை பற்றி பேசி இருக்கிற படம் 'ஒரே பேச்சு ஒரே முடிவு'.

இந்த படத்தில் புருஸ்லீ ராஜேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஸ்ரிதா சுஜிதரன் நடிக்கிறார். இவர்களுடன் தலைவாசல் விஜய், சம்பத் ராம், மீசை ராஜேந்திரன், ஐ.எம்.விஜயன், கராத்தே ராஜா ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியுள்ளார் வி.ஆர்.எழுதச்சன். ஆதர்ஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.அனில், இசை அமைத்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் எழுதச்சன் கூறும்போது “ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இணையும் நாயகன், அந்த குரூப்பில் தனது பள்ளிப் பருவ காதலி இருப்பதை அறிந்து, அவளை சந்திக்க அவள் கணவன் இல்லாத நேரத்தில் செல்கிறான். அப்போது அங்கு நடக்கும் ஒரு சம்பவத்தை மையமாக வைத்து, படம் உருவாகி உள்ளது. வாட்ஸ் அப் நல்ல விஷயம்தான். ஆனால் அதனை தவறாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. அதை பற்றி பேசுகிற படமாக உருவாகி உள்ளது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.