கெஜ்ரிவால் கைது: `நியாயமாக, வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட ஊக்குவிக்கிறோம்'- அமெரிக்கா வலியுறுத்தல்!

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைதுசெய்தது. அடுத்தநாள், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப்படுத்திய அமலாக்கத்துறை, கெஜ்ரிவாலை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிக்கை வைத்தது. இருப்பினும், 6 நாள்கள் மட்டும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி, தற்போது அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஜெர்மனி வெளியுறவுத்துறை, “நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் அனைத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் மற்ற இந்தியக் குடிமக்களைப் போலவே ஆம் ஆத்மி தலைவரும் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணைக்குத் தகுதியானவர்” எனத் தெரிவித்திருந்தது.

அதற்குப் பதிலளித்திருந்த இந்திய வெளியுறவுத்துறை, “ஜெர்மனின் கருத்து இந்தியாவின் உள் விவகாரங்களில் அப்பட்டமான தலையீடு. எங்கள் நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவது, நீதித்துறையின் சுதந்திரத்தை குறை மதிப்பிற்கு உட்படுத்துவது போன்ற கருத்துகளையே நாங்கள் காண்கிறோம்” எனக் கண்டனத்தை பதிவு செய்திருந்தது.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம், “அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட செய்திகளை அமெரிக்க அரசு கண்காணித்து வருகிறது.

அமெரிக்கா

சிறையில் உள்ள டெல்லி முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்டச் செயல்முறையை உறுதி செய்ய, இந்திய அரசை ஊக்குவித்து வருகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இதற்கு இந்திய அரசிடமிருந்து எந்த பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதற்கு முன்னர் மத்திய பா.ஜ.க அரசு, CAA சட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்தியபோதும், அமெரிக்கா அரசு, “இந்தியா செயல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்” எனத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.