2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்…
இருநூற்றுப்பத்து (210) இயைபு முறைக் குறியீடுகளின் (HS Code) கீழ் வகைப்படுத்தல்களுக்கான 64 பொருட்களை இறக்குமதி செய்யும் போது வசதியளிப்பதற்காக தனிக்கூட்டு வரி அறவீட்டுக்காக 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் விசேட வியாபாரப் பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வரி அறவீட்டை நடைமுறைப்படுத்தும் போது மேலெழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளால் இவ்வரி அறவீட்டுச் சட்டத்தை இடைநிறுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சட்டத்தை இடைநிறுத்துவதற்காக சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.