`இரு மகன்களை வளர்ப்பது கடினம்; சண்டையை தீர்ப்பதிலேயே நேரம் போகிறது' – நடிகை கரீனா கபூர்

பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் நடிகர் சைஃப் அலி கான் தம்பதிக்கு தைமூர் மற்றும் ஜெஹ் அலிகான் என இரு மகன்கள். மூத்த மகனுக்கு 7 வயதாகிறது. இரண்டாவது மகனுக்கு 3 வயதாகிறது. கரீனா கபூர் மற்றும் சைஃப் அலிகான் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கரீனா கபூர் கான், டி.வி ஷோ ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், இரண்டு மகன்களை வளர்ப்பதில் தனக்கு இருக்கும் சிரமங்களை பகிர்ந்திருந்தார். அதில், ”இரண்டு மகன்களையும் வளர்ப்பது மிகவும் கடினம். நானும் சைஃப் அலிகானும் பெரும்பாலான நேரத்தை இருவரின் சண்டையை தீர்க்கவே செலவிடுகிறோம். இருவரும் அதிகமாக சண்டையிடுவர்.

தைமூர் தன் தம்பி ஜெஹ்க்கை அதிகம் வம்பிழுப்பான். அவனைப் பிடித்து தள்ளிவிடுவதும் இழுப்பதுமாக இருக்கிறான். ஜெஹ், தன் அண்ணனுக்கு பயப்படமாட்டான். ’இப்படி செய்யாதே’ என்று சொல்வான்” என்று பகிர்ந்துள்ளார்.

’பொதுவாக, இரண்டு பேரிடமும் என்ன சொல்வீர்கள்?’ என்று கேட்டதற்கு, ’’ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்ளாதீர்கள் என்று அடிக்கடி சொல்வேன். தைமூர், இப்போது குத்துச்சண்டையில் கவனம் செலுத்துகிறான். அவன் குத்துச்சண்டையை பார்த்தே வளர்கிறான். குத்துச்சண்டை கையுறையை அணிந்து கொண்டு தைமூர் அவன் சகோதரனுடன் விளையாடச் செல்வான்.

என் மகன்களின் மனநிலை 15 நிமிடங்களுக்கு ஒரு முறை மாறிக்கொண்டே இருக்கும். ஜெஹ் சத்தமாக பேசினால், அது தைமூருக்கு பிடிக்காது. இருவரும் இப்படி சண்டையிட்டுக் கொள்வார்கள் என்று நானும் சைஃப்பும் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

வீட்டுக்கு வீடு வாசப்படி… பாலிவுட் வீட்டிலும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.