இந்தியாவில் வரும் மார்ச் 29 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள சுசூகி V-Strom 800 DE அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளின் முக்கிய சிறப்புகள் மற்றும் பல்வேறு நுட்ப விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
நடுத்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் இடம்பெற்றுள்ள V-Strom 800DE மாடல் முன்பாக பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் விலை அறிவிக்கப்பட உள்ளது.
Suzuki V-Strom 800 DE
- வி-ஸ்ட்ரோம் 800டிஇ எஞ்சின்: 776 cc பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
- விலை எதிர்பார்ப்புகள்: இந்திய சந்தையில் முழுதாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படும் நிலையில் விலை ரூ.12 லட்சத்தை எட்டலாம்.
776cc பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 83 bhp பவர் 8,500 rpm மற்றும் டார்க் of 78 Nm ஆனது 6,800 rpm-ல் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்று பை-டைரக்ஷனல் க்விக் ஷிஃப்டர் உள்ளது.
முழுமையாக அட்ஜெஸ்டபிள் செய்யக்கூடிய ஷோவா அப்சைடு டவுன் ஃபோர்க் பெற்று மற்றும் மோனோஷாக் அப்சாபர்பர் பெற்றதாக அமைந்துள்ளது. முன்புறத்தில் 21 அங்குல வீலுடன் 310 மிமீ ட்வீன் டிஸ்க் பிரேக் மற்றும் 260 மிமீ டிஸ்க் பிரேக் பின்புறத்தில் 17 அங்குல வீல் உள்ளது.
20 லிட்டர் கொள்ளளவு பெற்ற பெட்ரோல் டேங்குடன் 855 மிமீ இருக்கை உயரத்துடன் டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்றுள்ள பைக்கில் எலக்டாரானிக் ரைடிங் அம்சமாக (Suzuki Drive Mode Selector) மூலம் Active, Basic மற்றும் Comfort என மூன்று மோடுகளுடன் டிராக்ஷன் கன்ட்ரோல் வசதியும் உள்ளது.