ஆண்ட்ரியா படத்தை திரையிட கோர்ட் தடை
ஆண்ட்ரியா நடித்து முடித்துள்ள படம் 'கா : தி பாரஸ்ட்'. நாஞ்சில் என்ற புதுமுகம் இயக்கி உள்ள இந்த படத்தில் ஆண்ட்ரியா தவிர சலிம் கோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுந்தர்.சி பாபு இசை அமைத்திருந்தார். ஷாலம் ஸ்டூடியோ தயாரித்திருந்தது.
நீண்டநாள் தயாரிப்பில் இருந்த இந்த படம் நேற்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தை தடை செய்ய வேண்டும் என்று சன் பிசினஸ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மனுவில், “படத்தின் தயாரிப்பாளர் தங்கள் நிறுவனத்திடம் பெற்ற கடன் தொகை, நிலுவையை செலுத்தவில்லை. ஒப்பந்தபடி அதை செலுத்தாமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது. மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இதனால் நேற்று இந்தப்படம் வெளிவரவில்லை.