ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா கருத்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், “மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது வேறு சில நடவடிக்கைகள் காரணமாக மாநில ஆளுநர்கள் மீது வழக்கு தொடுப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ஆளுநரின் நடவடிக்கைகள் அல்லது புறக்கணிப்புகள் தொடர்பாக அரசியலமைப்பு பெஞ்ச் முன் குவியும் வழக்குகள் இந்திய அரசியலமைப்புக்கு ஆரோகியமானதல்ல” என்று அவர் கூறினார். மேலும், ஆளுநர் பதவி ஒரு […]