இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா!
கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் பாலா. சமீப காலமாக திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வரும் பாலா, இன்னொரு பக்கம் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது, முதியோர் இல்லங்களுக்கு உதவுவது, மலைக்கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுப்பது என்று பலதரப்பட்ட உதவிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், மருத்துவமனை கட்டி அதில் ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான் எனது நீண்ட நாள் கனவு என்று கூறி இருக்கிறார் பாலா. அதோடு, நான் படிக்க வைக்கும் ஒரு மாணவன் தற்போது இன்ஜினியரிங் படித்து வருகிறார். அவர் அடுத்த ஆண்டு படித்து முடித்ததும் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகளில் ஈடுபடுவேன். குறிப்பாக இதயம் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இந்த மருத்துவமனையை தான் கட்டப் போவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.