லக்னோ,
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் டேவிட் வில்லி தனிப்பட்ட காரணத்துக்காக அணியில் இருந்து விலகி விட்டார். இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றியை அவரது அடிப்படை விலையான ரூ.1¼ கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
கடந்த காலங்களில் அவர் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளில் அங்கம் வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :