சென்னை: தமிழர்களின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பிஞ்சிபோன செருப்பு என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதற்கு கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் பிரசாரம் அனல்பறந்து வருகிறது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என 4முனை போட்டி நிலவும் சூழலில் கூட்டணி கட்சிகளை ஆதரித்து, கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, தமாகா சார்பில் வேணு கோபால், […]