வரும் மக்களவைத் தேர்தலில் எப்போதும் இல்லாத வகையில் மகாராஷ்டிராவில் ஐந்து கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக விதர்பாவில் இருக்கும் நாக்பூர், ராம்டெக், பண்டாரா, சந்திராப்பூர், கட்சிரோலி ஆகிய தொகுதியில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் மூன்று கட்சியும், பா.ஜ.க கூட்டணியில் 3 கட்சியும் இடம் பெற்று இருந்தாலும் முதல் கட்டத்தேர்தல் மட்டும் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இடையே மட்டும் பிரதானமாக நடக்கிறது.
ஐந்து தொகுதியில் சிவசேனா ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. தேசியவாத காங்கிரஸ் முதல் கட்ட தேர்தல் நடக்கும் பகுதியில் போட்டியிடவில்லை. நாக்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி போட்டியிடுகிறார். கட்கரி நாக்பூரில் இதற்கு முன்பு 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் வெற்றி பெற்று இருக்கிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக நாக்பூரில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் விகாஸ் தாக்கரே போட்டியிடுகிறார்.
விகாஸ் தாக்கரே இதற்கு முன்பு மேயராகவும் இருக்கிறார். முதல் முறையாக மக்களவைத் தேர்தலை சந்திக்கும் விகாஸ் தாக்கரே தொகுதிக்கு பழையவர் என்றாலும் நிதின் கட்கரியை எதிர்கொள்வது சவாலான ஒன்றாகும். இங்கு கடந்த முறை மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே போட்டியிட்டு 2.2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
பண்டாரா கோண்டியா தொகுதியில் பா.ஜ.க சார்பாக சுனில் மந்தே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக டாக்டர் பிரஷாந்த் பட்டோலே போட்டியிடுகிறார். தொகுதிக்கு புதியவரான பிரஷாந்த் இப்போதுதான் முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறார்.
கட்சிரோலி தொகுதியில் பா.ஜ.க சார்பாக அசோக் நேடே போட்டியிடுகிறார். தற்போது எம்.பி.யாக இருக்கும் அசோக் நேடே மீண்டும் தற்போது போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக நாம்தேவ் கிஷன் போட்டியிடுகிறார். நக்சலைட்கள் ஆதிக்கமுள்ள இப்பகுதியில் எப்போதும் வாக்குசதவீதம் குறைவாகவே இருக்கும். சந்திராப்பூர் தொகுதியில் பா.ஜ.க சார்பாக மகாராஷ்டிரா அமைச்சர் சுதிர் முங்கந்திவார் போட்டியிடுகிறார்.
இத்தொகுதியில் ஏற்கனவே வெற்றி பெற்ற வேட்பாளருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. காங்கிரஸ் சார்பாக பிரதிபா தனோர்கர் போட்டியிடுகிறார். இவர் தற்போது எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் மக்களவை தேர்தலுக்கு புதியவர் ஆவர். இத்தொகுதியை காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் தனது மகளுக்கு கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் கொடுக்கப்படவில்லை. இதனால் அவர் சரியாக தேர்தல் பணியாற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராம்டெக் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக ஷியாம் பார்வே போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து சென்ற ராஜுபார்வே சிவசேனா(ஷிண்டே) சார்பாக போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் அனைவரும் புதுமுகங்கள் ஆவர். ஆனால் பா.ஜ.க சார்பாக போட்டியிடுபவர்களில் மூன்று பேர் தற்போது எம்.பி.யாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY