மியாமி ஓபன் டென்னிஸ்; ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா இணை சாம்பியன்

மியாமி,

அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை, குரோஷியாவின் இவான் டோடிக் – அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக் இணையுடன் மோதியது.

இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை போபண்ணா இணை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் போபண்ண இணை 6-7, 6-3 மற்றும் 10-6 என்ற செட் கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.