சென்னை: மத்திய பாஜக அரசு சமீபத்தில் தொடங்கிய மேற்கூரை சோலார் திட்டத்துக்கு (சூரியசக்தி மூலம் வீடுகளுக்கு மின்சாரம் ) தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திட்டத்தை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தொடங்கிய இரு மாதங்களில் சுமார் 35ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் (பிப்ரவரி 2024), ‘பிஎம் சூர்யா கர் முஃப்ட் பிஜ்லி யோஜனா’ (https://pmsuryaghar.gov.in/) என்ற மேற்கூரை சோலார் திட்டத்தை தொடங்கி வைத்திருந்தார். இதற்கு […]