
அரண்மனை 4ல் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் குஷ்பு, சிம்ரன்!
சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 1,2,3 ஆகிய பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை இயக்கியுள்ளார் சுந்தர். சி. இதில் அவர் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தமன்னா, ராஷி கண்ணா என இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். யோகி பாபு, வி.டி.வி.கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி இதற்கு இசையமைத்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் இந்த படத்திற்காக 'துள்ளல்' என்கிற புரொமோஷன் பாடல் ஒன்றில் குஷ்பு, சிம்ரன் இருவரும் இணைந்து நடனமாடியுள்ளதாக கூறப்படுகிறது.