
இளம் இயக்குனர் உடன் இணைந்த அருண் விஜய்!
நடிகர் அருண் விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'மிஷன் சாப்டர் 1' படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. தற்போது பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் 'என்னங்க சார் உங்க சட்டம்' என்கிற படத்தை இயக்கிய பிரபு ஜெயராம் இயக்கத்தில் அருண் விஜய் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் நடித்து வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.