திருவனந்தபுரம்: கேரள சைபர் பிரிவு போலீஸ் கூறியதாவது. மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எம்.வி.ஷரபுதின். இவர் கரோனா பெருந்தொற்று காலத்தின்போது ஊரடங்கு உத்தரவு குறித்து வெளியான பழைய செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதனுடன் வரும் மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) முறை கேடு நடத்தும் திட்டத்துடன் அடுத்த 3 வாரங்களுக்கு கேரளாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று வதந்தி பரப்பி உள்ளார். காவல் துறையின் கீழ் கொச்சி சைபர் கிளை போலீஸார் நடத்திவரும் சமூக ஊடக கண்காணிப்பு பணியின்போது இது கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், சைபர் போலீஸ் தலைமை யகத்தின் கீழ் வரக்கூடிய அனைந்து மாவட்ட சைபர் போலீசாரும் சமூக ஊடக செயல்பாடுகளை தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.