ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: கேரளா – ஜாம்ஷெட்பூர் இடையிலான ஆட்டம் சமன்

பெங்களூரு,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கடந்த 15-ம் தேதி முதல் நேற்று வரை ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சுமார் 15 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் இந்த தொடர் இன்று மீண்டும் தொடங்கியது.

இதில் நேற்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் – கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. ஜாம்ஷெட்பூர் அணி தரப்பில் சிவரியோ 1 கோலும், கேரளா தரப்பில் டிமிட்ரோஸ் 1 கோலும் அடித்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.