பெங்களூரு கர்நாடக பாஜகவின் மூத்த பெண் தலைவர் தேஜஸ்வினி கவுடா காங்கிரசில் இணைந்துள்ளார். கர்நாடக மாநில பாஜக மேலவை உறுப்பினரும் மூத்த பெண் தலைவருமான தேஜஸ்வினி கவுடா, அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைமையகத்தில், பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மாநிலத் தலைவர் பவன் கேரா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஏற்கனவே 2004 -2009 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தேஜஸ்வினி கவுடா 2014 […]