
குறும்பட இயக்குனருடன் இணையும் நயன்தாரா!
தமிழில் இமைக்கா நொடிகள், யானை, காதர் பாட்சா (எ) முத்துராமலிங்கம் போன்ற படங்களைக் தயாரித்த நிறுவனம் ட்ரம் ஸ்டிக் புரொடக்சன்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தை தயாரிக்கின்றது.
அதன்படி, இந்நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நாயகியாக நடிக்கிறார். இதனை குறும்பட இயக்குனர் சதீஷ் இயக்குகிறார் .இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.