சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் விஜய் பட வில்லன்!
துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்தது மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமானவர் வித்யூத் ஜம்வால். இதையடுத்து தமிழில் 'அஞ்சான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு அவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், ஹிந்தியில் குறிப்பிட்ட ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ லஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. இப்போது இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வித்யூத் ஜம்வால் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.