ஜம்மு காஷ்மீரில் வரும் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதே நேரம் காஷ்மீர் சட்டப்பேரவைக்கான தேர்தல் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் என ஆணையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில், காஷ்மீரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை அக்கட்சி நேற்று நேற்று வெளியிட்டது. இந்தப் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தேர்தல் ஆணையத்தில் நேற்று சமர்ப்பித்தார்.
இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மூத்த நிர்வாகிகள் பிரியங்கா, கே.சி. வேணுகோபால், சச்சின் பைலட் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இது தவிர, அம்பிகா சோனி, பரத்சிங் சோலங்கி, ஜி.ஏ.மிர், தாரிக் ஹமீத் காரா, சுக்விந்தர் சிங் சுகு, ரேவந்த் ரெட்டி, ஹரிஷ் ராவத், பிரமோத் திவாரி, பவன் கேரா உள்ளிட்ட 27 மூத்த தலைவர்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.