ஜெயங்கொண்டம் தமிழகத்தில் பாஜக டெபாசிட் கூட வாங்காது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நேற்று இரவு அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணா சிலை பகுதியில், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். உதயநிதி தனது உரையில், ”தற்போது பானை சின்னம் புகழ் பெற்ற சின்னமாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் பல்வேறு தலைவர்களுக்கு நான் பிரசாரம் செய்துள்ள என் வாழ்வில் இது ஒரு பொன்னாள். முதன்முதலாக […]