நேபாளத்தில் டாக்சி ஆற்றில் கவிழ்ந்து விபத்து – 5 பேர் பலி

காத்மாண்டு,

நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் டாக்சி கவிழ்ந்ததில் 5 பேர் இறந்தனர் மற்றும் ஒருவர் காணாமல் போன சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த 5 பேர்களில் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில்,

“காத்மாண்டுவில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு டிரைவர் உள்பட 6 பேர் டாக்சியில் இன்று காலை வீடு திரும்பி கொண்டிருந்தனர். அந்த டாக்சி சித்வான் மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காணாமல் போனதால் அந்த நபரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. உயிரிந்தவர்களில் ஒருவர் டாக்சியின் டிரைவர் என தெரியவந்துள்ளது” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.