டில்லி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாஜகவுக்குத் தோல்வி பயம் வந்துள்ள்தாக விமர்சித்துள்ளார். டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் உரையை திருச்சி சிவா எம்.பி. வாசித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எனது கடுமையான கண்டனத்தையும் தி.மு.க.வின் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் தனது ஏவல் படைகளான சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத் துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை பா.ஜ.க. அரசு மிரட்டுகிறது. டில்லி முதல்வர் அரவிந்த் […]
