சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். 48 வயதேயான டேனியல் பாலாஜியின் மறைவு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது மறைவிற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். சித்தி சீரியல் மூலம் மிகுந்த கவனத்தை பெற்றவர் டேனியல் பாலாஜி. இந்த சீரியல் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. இதை சரியாக