இவிஎம்மில் முறைகேடு செய்ய ஊரடங்கு உத்தரவு என வதந்தி பரப்பியவர் கைது

திருவனந்தபுரம்: கேரள சைபர் பிரிவு போலீஸ் கூறியதாவது. மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எம்.வி.ஷரபுதின். இவர் கரோனா பெருந்தொற்று காலத்தின்போது ஊரடங்கு உத்தரவு குறித்து வெளியான பழைய செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன் வரும் மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) முறை கேடு நடத்தும் திட்டத்துடன் அடுத்த 3 வாரங்களுக்கு கேரளாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று வதந்தி பரப்பி உள்ளார். காவல் துறையின் கீழ் கொச்சி சைபர் … Read more

6 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லாத பிரமர் மோடி! உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்

Prime Minister Modi, central intelligence report: பிரதமர் மோடி கடந்த 6 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்துக்காக எங்கும் செல்லாதது பேசு பொருளாகியுள்ளது. இதற்கு பின்னணியில் உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் தான் காரணம் என்கிறது அரசியல் வட்டாரம்.

ஐதராபாத் மேயர் கட்வால் விஜயலட்சுமி காங்கிரஸில் இணைந்தார்

ஐதராபாத் ஐதராபாத் நகர மேயர் கட்வால் விஜயலட்சுமி காங்கிரசில் இணைந்துள்ளார். பாரதீய ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த கட்வால் வியலட்ச்மி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் மேயர் ஆவார்.  நேற்று இவர் திடீரென அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் தீபா தஸ்முஷி ஆகியோர் முன்னிலையில் விஜயலட்சுமி தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.  கட்வால் விஜயலட்சுமியுடன் அவரது சகோதரர் வெங்கட்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். விஜயலட்சுமியின் தந்தையும், பாரதீய … Read more

மோடி இதை மட்டும் அறிவித்துவிட்டால்..லோக்சபா தேர்தலிலேயே நாங்க போட்டியிடலை.. மமதா கட்சி அதிரடி சவால்!

கொல்கத்தா: ஏழைகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் (கேஸ் சிலிண்டர்) இலவசமாக வழங்குவதற்கான அரசாணையை மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளியிட்டுவிட்டால் லோக்சபா தேர்தலில் இருந்தே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலகிவிடும் என அக்கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் 19-ந் தேதி முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் Source Link

அமைதியாக ஓய்வெடுங்கள் பாலாஜி சித்தப்பா : நடிகர் அதர்வா உருக்கம்

நடிகர் டேனியல் பாலாஜி நேற்று இரவு மாரடைப்பு காரணமாக திடீர் மரணம் அடைந்தார். அவருடைய மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கமல்ஹாசன், ராதிகா, ஆண்ட்ரியா, ஆர்யா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பாலாஜி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். டேனியல் பாலாஜியின் சகோதரான மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா அவரது இரங்கலில், “வாழ்க்கை விஷயங்களில் நம்மை நாமே அதிகம் இணைத்துக் … Read more

மனுஷன் ஹீரோவா நடிச்சிருக்கலாம்.. டேனியல் பாலாஜி கல்லூரி கால போட்டோ..ஆதங்கப்படும் ஃபேன்ஸ்!

சென்னை: பிரபல வில்லன் நடிகரான டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அவரது இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்ற நிலையில், அவரின் கல்லூரி கால போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது. தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இருந்தாலும் சிலர் மக்கள்

காங்கிரசில் இணைந்த ஐதராபாத் மேயர்

ஐதராபாத், தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் மேயர் கட்வால் விஜயலட்சுமி. பாரதீய ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்தவர். இவர் நேற்று திடீரென அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் தீபா தஸ்முஷி ஆகியோர் முன்னிலையில் விஜயலட்சுமி தன்னை அக்கட்சியில் இணைத்து கொண்டார். விஜயலட்சுமியுடன் அவரது சகோதரர் வெங்கட்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனிடையே விஜயலட்சுமியின் தந்தையும், பாரதீய ராஷ்டிர சமிதி கட்சி பொதுச்செயலாளருமான கே.கேசவ ராவ், பாரதீய ராஷ்டிர சமிதி … Read more

பாகிஸ்தான் 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறாரா ஷகீன் ஷா அப்ரிடி?

லாகூர், கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனையடுத்து அந்த அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த பாபர் அசாம் நீக்கப்பட்டு 20 ஓவர் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடியும், டெஸ்ட் அணியின் கேப்டனாக பேட்ஸ்மேன் ஷான் மசூத்தும் நியமிக்கப்பட்டனர். ஒருநாள் போட்டி அணிக்கு கேப்டன் யாரும் நியமிக்கப்படவில்லை. சமீபத்தில் புதிய தலைவராக … Read more

நேபாளத்தில் டாக்சி ஆற்றில் கவிழ்ந்து விபத்து – 5 பேர் பலி

காத்மாண்டு, நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் டாக்சி கவிழ்ந்ததில் 5 பேர் இறந்தனர் மற்றும் ஒருவர் காணாமல் போன சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த 5 பேர்களில் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், “காத்மாண்டுவில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு … Read more