இந்திய – இலங்கை இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு

இந்திய – இலங்கை இடையிலான இருதரப்புப் பொருளாதார திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான சந்திப்பொன்று (28) புதுடில்லியில் நடைபெற்றது. இந்திய வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ராவின் (Vinay Kwatra) அழைப்பின் பேரில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உள்ளிட்ட இலங்கையின் உயர்மட்டக் குழுவின் பங்கேற்புடன் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது சாகல ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிறப்பு வரவேற்பளித்ததுடன், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி … Read more

Deepfake: “AI மூலம் என் குரலை தவறாக பயன்படுத்தினால்…'' – பில் கேட்ஸிடம் பேசிய நரேந்திர மோடி!

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள மைக்ரோசாஃப்டின் இணை நிறுவனரான பில்கேட்ஸ், தனது சுற்றுப்பயணங்கள் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.  அந்தவகையில் பிப்ரவரி 29 அன்று டெல்லியில் உள்ள 7 ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், பிரதமர் நரேந்திர மோடியை பில்கேட்ஸ் சந்தித்து உரையாடினார். பில்கேட்ஸுடனான மோடியின் உரையாடல் 45 நிமிட வீடியோவாக மோடியின் தனிப்பட்ட யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.  சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் டெக்னாலஜி குறித்து மோடி பில்கேட்ஸுடன் தனது … Read more

மக்களவை தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட 30% அதிகம் விற்பனையானால் விசாரணை

புதுக்கோட்டை: மக்களவைத் தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகளில் வழக்கத்தைவிட 30 சதவீதத்துக்கும் மேல் மதுபானங்கள் விற்பனையாகும் கடைகளில், டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, வாகனங்களில் முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பொருட்கள், ரொக்கம் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அரசியல் கூட்டங்களையும், தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், டாஸ்மாக் கடைகளின் விற்பனையைக் கண்காணிக்க தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். … Read more

ஜூன் 1-ம் தேதி வரை தேர்தல் கருத்து கணிப்பு வெளியிட தடை

புதுடெல்லி: நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலும் நடத்தப்பட உள்ளது. மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படஉள்ளது. முதல்கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி 21 மாநிலங்களை சேர்ந்த 102 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இறுதிக் கட்டமாக ஜூன் 1-ம் தேதி 8 மாநிலங்களை சேர்ந்த 57 மக்களவைத் … Read more

லண்டனில் தனி பங்களா வாங்கிய பிரபாஸ்?

பாகுபலி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் முன்னணி நட்சத்திரமாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறிவிட்டார் நடிகர் பிரபாஸ். அந்த படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவினாலும், சமீபத்தில் வெளியான அவரது சலார் திரைப்படம் ஆவேரேஜான வரவேற்பை பெற்றாலும் கூட பிரபாஸுக்கான கிரேஸ் மற்றும் வியாபார மதிப்பில் எந்த சரிவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக கல்கி படத்தில் நடித்து வரும் பிரபாஸ், அடுத்ததாக ஸ்பிரிட் உள்ளிட்ட சில … Read more

Actor Daniel balaji: தம்பி.. டேனியல் பாலாஜி மறைவிற்கு அஞ்சலி செலுத்திய நடிகை ஆன்ட்ரியா!

சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். 48 வயதேயான டேனியல் பாலாஜியின் மறைவு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது மறைவிற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். சித்தி சீரியல் மூலம் மிகுந்த கவனத்தை பெற்றவர் டேனியல் பாலாஜி. இந்த சீரியல் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. இதை சரியாக

நாடாளுமன்ற தேர்தல் மேலும் 11 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதில் மேலும் 11 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை நேற்று கட்சி மேலிடம் வெளியிட்டது. இந்த பட்டியலில் பஞ்சாப்பில் 6, மேற்கு வங்காளத்தில் 2, ஒடிசாவில் 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கியமாக அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து அமிர்தசரஸ் தொகுதியில் களம் காண்கிறார். மாநிலத்தின் பரித்கோட் தொகுதியில் ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் நிறுத்தப்பட்டு உள்ளார். இவர் கடந்த தேர்தலில் வடமேற்கு … Read more

ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதியில் சிக்கி ரெட்டி ஜோடி தோல்வி

மாட்ரிட், ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் மாட்ரிட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சிக்கி ரெட்டி- சுமீத் ரெட்டி இணை 17-21 மற்றும் 12-21 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஹனிங்டியாஸ் மெண்டரி- ரினோவ் ரிவால்டி இணையிடம் வீழ்ந்தது. இந்த ஆட்டம் 29 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இத்துடன் இந்த தொடரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. தினத்தந்தி Related Tags : ஸ்பெயின் … Read more

விபசாரத்தில் ஈடுபட்டால் பொது இடத்தில் கல் எறிந்து கொல்லப்படுவார்கள்: தலிபான்கள்

காபூல், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் ஆட்சியை கைப்பற்றிய போது, தங்களின் முந்தைய ஆட்சி போல கொடூரமாக இருக்காது என்று தலிபான்கள் அறிவித்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல தாலிபான்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கினர். குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்த போதிலும், பெண்கள் உயர் கல்வி கற்க தடை உள்பட பல்வேறு … Read more

வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் முகமாக ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இயேசுவின் துன்பம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் 40 நாள் தவக் காலத்தில் கிறிஸ்தவர்கள் மதக் கடமைகளில் ஈடுபடுகின்றனர். வரலாற்றில் மிக மோசமான பொருளாதார சவாலை எதிர்கொண்ட ஒரு நாடு என்ற வகையில், தாங்கிக்கொள்ளும் இயலுமை நிறைந்த தேசமாக ஆசிர்வாதத்துடன் உயிர்த்தெழ ஆரம்பித்திருக்கிறோம். பல்லின சமூகமாக வாழும் நாடு என்ற வகையில் இலங்கை தற்காலத்தில் எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்காக ஒன்றிணைந்து செயற்படுவது … Read more