மக்களவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 950 பேர் போட்டி

சென்னை: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதற்கட்ட தேர்தல் தமிழகத்தில் ஒரேகட்டமாக நடைபெறுகிறது. வரும் ஏப்.19-ம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் கடந்த மார்ச் 20-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. மார்ச் 27-ம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் 1,403 வேட்பாளர்கள் சார்பில் 1,749 … Read more

ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை காக்க இண்டியா கூட்டணி டெல்லியில் இன்று போராட்டம்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி அமைச்சருமான கோபால் ராய் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஜனநாயகத்தை காக்க இண்டியா கூட்டணி டெல்லியில் ஞாயிற்றுக் கிழமை போராட்டம் நடத்துகிறது. இது எந்த தனி நபருக்கு ஆதரவான போராட்டம் … Read more

'பேமிலி ஸ்டார்' படத்திற்கு 'குஷி' வரவேற்பை நம்பும் விஜய் தேவரகொண்டா

தெலுங்கின் இளம் முன்னணி நடிகர் என்றாலும் தமிழ் சினிமா ரசிகர்களாலும் அறியப்பட்டவர் விஜய் தேவரகொண்டா. அவருடைய 'அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம்' ஆகிய படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிடித்தமான படங்கள். குறிப்பாக 'கீதா கோவிந்தம்' படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை அதிகம் பெற்ற ஒரு படமாக அமைந்தது. நேரடியாக தமிழில் 'நோட்டா' படத்தில் நடித்திருந்தாலும் அந்தப்படம் வெற்றி பெறாமல் போனதால் தொடர்ந்து தெலுங்கில் மட்டுமே நடித்து வருகிறார். அவர் நடித்து கடந்த ஆண்டில் … Read more

Daniel Balaji: மருதநாயகம் படத்திலேயே கமலுடன் இணைந்த டேனியல் பாலாஜி.. கேள்வி கேட்ட தருணம்!

சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். 48 வயதேயான டேனியல் பாலாஜியின் இந்த திடீர் மரணம் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் தென்னிந்திய அளவில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்தி என்ற சீரியல் மூலம் நடிகராக தன்னுடைய பயணத்தை துவங்கிய டேனியல் பாலாஜி, தொடர்ந்து வில்லனாக கோலிவுட்டில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும்

நாட்டை குற்றவாளிகள்தான் வழிநடத்துகிறார்கள்- ராகுல் காந்தி

புதுடெல்லி, பிரதமர் மோடி ஜனநாயகத்தின் கழுத்தை நெரிப்பதாகவும், தாங்கள் விரும்பிய அரசை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை மக்களிடம் இருந்து பறித்து விட்டதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘ஒருபுறம், நன்கொடை வர்த்தகம் செய்து வரும் பா.ஜ.க, நாட்டில் மிரட்டி பணம் பறிக்கும் ஒரு அரசை நடத்தி வருகிறது. மறுபுறம், பிரதான எதிர்க்கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கி, முதல்-மந்திரிகளை சிறையில் அடைத்து எதிர்க்கட்சிகளை நியாயமான முறையில் தேர்தலில் … Read more

ஐ.பி.எல்: லக்னோ அணியில் டேவிட் வில்லிக்கு பதிலாக மாற்று வீரர் சேர்ப்பு

லக்னோ, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் டேவிட் வில்லி தனிப்பட்ட காரணத்துக்காக அணியில் இருந்து விலகி விட்டார். இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றியை அவரது அடிப்படை விலையான ரூ.1¼ கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த காலங்களில் அவர் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளில் அங்கம் வகித்திருந்தார் என்பது … Read more

பலுசிஸ்தானில் கனமழையால் மேற்கூரை இடிந்து விபத்து – சுரங்க தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில், பணியாளர்கள் சிலர் சிறிய அறைகளை அமைத்து தங்கியிருந்தனர். வெளியூர்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்காக அந்த அறைகள் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையின்போது, தொழிலாளர்கள் தங்கியிருந்த அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அவர்களின் சொந்த ஊர்களுக்கு … Read more

“மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்” – உதயநிதி

மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சியமைத்தால் பள்ளி மாணவர்களுக்கு கண்டிப்பாக லேப்டாப் வழங்கப்படும் என திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று விருத்தாசலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார். கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து நேற்று விருத்தாசலத்தில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 2019 தேர்தலின் போது, இங்கு உங்களை சந்தித்து வாக்கு கோரினேன். அப்போது போட்டியிட்டவர்களை வெற்றிபெறச் செய்தீர்கள். அடுத்து 2021 சட்டப்பேரவைத் … Read more

முக்தார் அன்சாரியின் உடல் சொந்த ஊரில் அடக்கம்: மாரடைப்பில் இறந்தது உடற்கூராய்வில் உறுதி

லக்னோ: கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தார் அன்சாரியின் உடல் அவரது சொந்த ஊரில் இன்று (சனிக்கிழமை) அடக்கம் செய்யப்பட்டது. உடற்கூராய்வில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததுஉறுதியாகியுள்ளது. முன்னதாக முக்தாரின் உடல் உத்தரப் பிரதேசம் காஜிபூர் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வெள்ளிக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து முக்தாரின் மூத்த சகோதரர் சிப்கத்துல்லா அன்சாரி கூறுகையில், “சில தாமதத்திற்கு பின்னர் இரவு நாங்கள் உடலைப் பெற்றுக்கொண்டோம். இரவில் இறுதிச் சடங்கு செய்ய முடியாது என்பதால், சனிக்கிழமை காலை … Read more

இந்தியாவில் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை! ஐ.நா.வுக்கு துணைகுடியரசு தலைவர் பதிலடி…

டெல்லி: கெஜ்ரிவால் கைது சம்பந்தமாக, ஐ.நா.சபை கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு இந்திய துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர் பதிலடி கொடுத்தள்ளார்.  எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை, இந்தியாவில் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள்  யாரும் இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளார். மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு உள்ளார். இதுகுறித்து, அமெரிக்கா, ஐநா சபை உள்பட சில நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது சலசலப்பை ஏற்படுத்தியது. நமது … Read more