பயமாக இருக்கிறது – சீரியல் வில்லி பேட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட் ஆகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் விஜயா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் அனிலா ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில், '33 வருடங்களாக திரைத்துறையில் இருந்தும் சிறகடிக்க ஆசை தொடர் எனக்கு பிரபலத்தை கொடுத்துள்ளது. பலர் நான் வெளியே போகும்போதெல்லாம் என்னுடன் செல்பி எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் சீரியலில் ஏன் மீனாவை கொடுமை படுத்துகிறீர்கள். நேரில் பார்த்தால் நான் … Read more

எனக்கு முன்னாடியே போயிட்டியே என் தங்கமே.. டேனியல் பாலாஜி உடலை பார்த்து கதறியழுத அம்மா.. பெருந்துயரம்

சென்னை: ஆவடியில் அம்மாவின் ஆசைக்காகத்தான் டேனியல் பாலாஜி கோயிலையே கட்டினார். தந்தையின் மறைவுக்குப் பிறகு தனது தாய்க்கு துணையாக இருந்து வந்த டேனியல் பாலாஜி தற்போது அம்மாவை விட்டு விட்டு அதற்குள் பிரிந்து சென்றது அவரது தாயை மீள முடியாத துயரில் ஆழ்த்தியுள்ளது. ராதிகா சரத்குமார் நடித்த சித்தி சீரியலில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிகராக அறிமுகமான

மியாமி ஓபன் டென்னிஸ்; ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா இணை சாம்பியன்

மியாமி, அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை, குரோஷியாவின் இவான் டோடிக் – அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக் இணையுடன் மோதியது. இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை போபண்ணா இணை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் போபண்ண இணை … Read more

“திமுகவும், பாஜகவும் வீட்டுக்கும் நாட்டுக்கும் ஆபத்தானவர்கள்” – அதிமுக நிர்வாகி விந்தியா

மதுரை: திமுகவும், பாஜகவும் வீட்டுக்கும் நாட்டுக்கும் ஆபத்தானவர்கள்: அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் விந்தியா, தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். மதுரை – அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வாக்குகள் சேகரித்து மதுரை முனிச்சாலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் வாக்கு சேகரிப்பு பணியில் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நடிகை விந்தியா நேற்று ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: ‘மோடியா, லேடியா’ எனக் கேட்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர் சொன்னதை மறந்துவிட்டு தற்போது … Read more

‘‘மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கு ஆபத்து விளைவித்த மோடி அரசு” – பினராயி விஜயன் சாடல்

திருவனந்தபுரம்: இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கு நரேந்திர மோடி அரசு ஆபத்தை ஏற்படுத்தி இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். கேரளாவின் 20 மக்களவைத் தொகுதிக்கும் வரும் 26-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய கேரள முதல்வரும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன், “மத்திய அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக … Read more

திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திருமாவளவனும் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர். இதில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் ரவிக்குமாருக்கு இதுவரை சின்னம் ஒதுக்கப்படவில்லை.

சின்னத்திரையில் ‛தித்திக்குதே' ஸ்ரீதேவி

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் கடைசி மகளான ஸ்ரீதேவி விஜயகுமார் தமிழில் காதல் வைரஸ், தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். திருமணத்திற்கு பின் படங்கள் நடிப்பதை குறைத்துக் கொண்ட அவர், தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி என்கிற நிகழ்ச்சியில் நடுவராக ஸ்ரீதேவி கலந்து கொண்டுள்ளார். இப்போதும் பார்ப்பதற்கு இளமையாக இளம் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் அழகுடன் ஸ்ரீதேவி ஜொலிக்கிறார். எனவே, அவரை மீண்டும் நடிக்க வர … Read more

ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜி… கமல்ஹாசன் இரங்கல்!

சென்னை: தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தனது நடிப்பின் மூலம் கவனம் பெற்ற நடிகர் டேனியல் பாலாஜி நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். சின்னத்திரையில் வெள்ளித்திரைக்கு வந்த முக்கியமானவர்களில் டேனியல் பாலாஜியும் ஒருவர். இவர், சித்தி சீரியலில், டேனியல்

மேல், தென், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர்,

பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  மார்ச் 31ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 மார்ச் 30ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், தென், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வட மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் … Read more

தஞ்சை காங்கிரஸ் தலைவரை சந்தித்தது மரியாதை நிமித்தம்: அண்ணாமலை தகவல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையாரை, பாஜக மாநிலத் தலைவர் க.அண்ணாமலை நேற்று (மார்ச் 30) மாலை நேரில் சந்தித்தால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் அருகே பூண்டியை பூர்வீகமாக கொண்டவர் மறைந்த துளசி அய்யா வாண்டையார். இவரது மகன் கிருஷ்ணசாமி வாண்டையார். பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். கிருஷ்ணசாமி வாண்டையார் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனின் சம்பந்தி. இந்நிலையில் இன்று … Read more