2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய கொடியை ஏந்திச் செல்லும் சரத் கமல் “எந்த வகையான விளையாட்டு வீரர்”… TNAA விமர்சனம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய கொடியை ஏந்திச் செல்ல இருக்கும் சரத் கமல் “அதிக பரிச்சயம் இல்லாத விளையாட்டு வீரர்” என்று தமிழ்நாடு தடகள சங்கம் (TNAA) தெரிவித்துள்ளது.   இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு TNAA அனுப்பியுள்ள கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி இந்திய கொடியை ஏந்திச் செல்லும் அளவிற்கு சரத் கமல் எந்த வகையில் சிறந்த விளையாட்டு வீரர் என்று கேள்வி எழுப்பியுள்ளது. தற்போதைய … Read more

தன் கதையில் தானே நடிக்கும் சோனா

தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானாலும் பின்னர் கவர்ச்சி நடிகை ஆனவர் சோனா. 'கனிமொழி' என்ற படத்தை தயாரித்து பெரும் இழப்பை சந்தித்தார். சொந்தமாக செயற்கை நகை வியாபாரம் செய்தார். எதுவும் சரியாக அமையவில்லை. இந்த நிலையில் அவர் தனது வாழ்க்கை கதையை 'ஸ்மோக்' என்ற பெயரில் தயாரித்து, இயக்கி வருகிறார். இது 'ஷார்ட் பிளிக்ஸ்' என்ற ஓடிடி தளத்தில் இரண்டு சீசன்களாக வெளியாகிறது. முதல் சீசனுக்கான படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இந்த தொடரில் 5 வயது சோனாவாக ஆதினி … Read more

Actor Vijay: ஏப்ரல் 14ல் வெளியாகும் GOAT படத்தின் பாடல்.. அப்ப விஜய் பிறந்தநாளுக்கு.. ட்ரீட் இருக்கு

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் கேரளா உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. அடுத்ததாக ரஷ்யாவின் மாஸ்கோவில் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு இரண்டு வாரங்கள் தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் நடக்கவுள்ள நிலையில் ஓட்டு மொத்த ஷூட்டிங்கையும் படக்குழுவினர் நிறைவு செய்ய

`சௌமியா அன்புமணி தேர்தலில் போட்டியிடுவது குடும்ப அரசியலா, இல்லையா?' – விகடன் கருத்துக்கணிப்பு

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க, தமிழ்நாட்டில் 10 இடங்களில் போட்டியிடுகிறது. இத்தனைக்கும், மார்ச் 19-ம் தேதி சேலம் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் மோடி கலந்துகொள்ளும் அதே நாள்தான் பா.ஜ.க – பா.ம.க கூட்டணியே உறுதியானது. பின்னர் சேலம், மாநாட்டில் தந்தையும், மகனுமான ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொள்ள, `குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்’ என அந்த மேடையிலேயே தி.மு.க-வை சாடினார் பிரதமர் மோடி. சௌமியா அன்புமணி அதற்கடுத்த சில நாள்களில், தாங்கள் போட்டியிடும் … Read more

“புதுச்சேரிக்கு தேவையான நிதியை பாஜக அரசு வழங்கவில்லை” – எடப்பாடி பழனிசாமி பேச்சு

புதுச்சேரி: “புதுச்சேரி தனி மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்றால் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்கப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். மேலும், “மத்தியில் காங்கிரஸ், பாஜக என மாறி மாறி ஆட்சிக்கு வருகிறது. ஆனால், எந்த ஆட்சி வந்தாலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு தேவையான நிதியை வழங்குவது கிடையாது” என்று அவர் குற்றம்சாட்டினார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் … Read more

அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவியுடன் ஹேமந்த் சோரனின் மனைவி சந்திப்பு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவாலை, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா சோரன், “ஜார்க்கண்ட்டில் 2 மாதங்களுக்கு முன் என்ன நிகழ்ந்ததோ அதுதான் தற்போது டெல்லியில் நடந்திருக்கிறது. எனது கணவர் ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டதைப் போன்று அரவிந்த் கேஜ்ரிவாலும் சிறையில் இருக்கிறார். சுனிதா கேஜ்ரிவாலை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்; துயரத்தை பகிர்ந்து கொண்டேன். எங்கள் போராட்டத்தை … Read more

"முரளி படத்தில் உதவி இயக்குநர்; ஷூட்டிங்கில் அண்ணனுடன் கோபம்!" – டேனியல் பாலாஜி நினைவலைகள்

மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை மரணமடைந்த நடிகர் டேனியல் பாலாஜிக்கு திரைத்துறையினர் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் பாலாஜியுடனான நினைவுகளைப் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறிவரும் வேளையில், இவர் குறித்து அவ்வளவாகத் தெரியாத சில தகவல்களும் வெளியாகி வருகின்றன. டேனியல் பாலாஜி பாலாஜியாக சின்னத்திரையில் நுழைந்தவரை ‘சித்தி’ சீரியலின் கேரக்டர் பெயரான ‘டேனியல்’, டேனியல் பாலாஜியாகவே மாற்றிவிட்டது. ‘சித்தி’ தொடருக்குப் பிறகு தீவிரமாக சினிமா முயற்சியிலிருந்தவருக்கு சினிமாவில் நடிகராக வேண்டுமென்பதைக் காட்டிலும் இயக்குநராகலாம் … Read more

வாக்காளர்களே உஷார் : அநாமதேய அழைப்புகள் மூலம் வாக்காளர்களிடம் மொபைலில் தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்துவது சட்டவிரோதமானது…

அடையாளம் தெரியாத நபர்களால் IVR மூலம் மொபைல் எண்ணில் நடத்தப்படும் தேர்தல் கருத்துக்கணிப்பு சட்டவிரோதமானது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பெரும்பாலான வாக்காளர்களுக்கு கணினி உதவியுடன் வெவ்வேறு தொலைபேசி எண்ணில் இருந்து இன்று இன்டராக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் (IVR) அழைப்பு வந்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வரிசைப்படுத்தி எந்த வரிசை எண் வேட்பாளருக்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள் என்று அந்த கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்காமல் அழைப்பை துண்டிக்கும் வாக்காளர்களுக்கு வெவ்வேறு … Read more

அர்னால்டுக்கு பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது

ஹாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் அர்னால்டு ஸ்வாஸ்னேகர். பாடி பில்டராக இருந்து சினிமா நட்சத்திரமாக உயர்ந்தவர். 1970ல் வெளியான 'ஹெர்குலஸ் இன் நியூயார்க்' படம் மூலம் நடிகராக அறிமுமான இவர் பின்னர் 1984ல் வெளியான 'தி டெர்மினேட்டர்' மூலம் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்தார். அதன் பிறகு வெளிவந்த இதன் 4 பாகங்களிலும் நடித்தார். பிரடியேட்டர், ராவ் டீல், ட்ரூ லைவ்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் 'எக்ஸ்பண்டபிள்' படத்தின் அனைத்து பாகங்களிலும் நடித்தார். அர்னால்டுக்கு இப்போது 76 வயதாகிறது. என்றாலும் … Read more

Aranmanai 4: பேய்ப்படத்தில் கிளாமர் எதுக்கு.. ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் சுந்தர் சி அதிரடி!

சென்னை: நடிகர் சுந்தர் சியின் அரண்மனை படங்கள் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வந்த நிலையில் தற்போது அரண்மனை 4 படத்தின் ஷூட்டிங் முடிக்கப்பட்டு விரைவில் ரிலீசாகவுள்ளது. படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கலையொட்டி ரிலீஸ் ஆகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளி போனது. இந்நிலையில் படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.