நீலகிரி: ஆ.ராசா வாகனத்தை முறையாக சோதனை செய்யாத பறக்கும் படை அலுவலர் சஸ்பெண்டு! – என்ன நடந்தது?

நீலகிரி நாடாளுமன்ற தனி தொகுதியில் தி.மு.க சார்பில் தொடர்ந்து 4 – வது முறையாக போட்டியிடுகிறார் ஆ.ராசா. அவரது வேட்புமனு ஏற்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் எம்.பி யாகும் முனைப்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 25 – ம் தேதி கோத்தகிரியில் தி.மு.க சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் தி.மு.க நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக் ஆகியோருடன் காரில் பயணித்திருக்கிறார் ஆ. ராசா.‌ ராசா … Read more

விசிகவுக்கு பானை, மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு

சென்னை: மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்சித் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இதுதவிர கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் விசிக போட்டியிடுகிறது. எனவே, இந்தத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னத்தை, பொதுவான சின்னமாக … Read more

“இண்டியா கூட்டணி மீதான பாஜக அச்சத்தின் வெளிப்பாடுதான் ஐ.டி நோட்டீஸ்” – டி.கே.சிவகுமார்

பெங்களூரு: விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை பாஜக குறிவைப்பதாக கர்நாடக துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சி வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என்று கூறி, வட்டி மற்றும் அபராதத்துடன் ரூ.1,823 கோடி வரி நிலுவை செலுத்துமாறு அக்கட்சிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது; சட்டம் இருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வதற்கு பாஜக அரசின் … Read more

“காலநிலை மாற்றம் பற்றி உங்களுக்குப் பாடம் எடுக்கவா?” – குதர்க்க கேள்விகளை தெறிக்கவிட்ட கயானா அதிபர்

புதிய எண்ணெய், எரிவாயுத் திட்டங்களால் கயானா நாடு கரியமில வாயு உமிழ்வை அதிகரிக்கும் என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து குதர்க்கமாகக் கேள்வி கேட்ட செய்தி ஊடக நெறியாளரை சரமாரியாக கேள்விகளால் துளைத்து கவனம் ஈர்த்துள்ளார் அந்நாட்டு அதிபர் இர்ஃபான் அலி. இத்தகைய குற்றச்சாட்டுகள் மூன்றாம் உலக நாடுகள் மீதான மேற்கத்திய நாடுகளின் நயவஞ்சனை என்றும் அவர் சாடியுள்ளார். தென் அமெரிக்க கண்டத்தில் உள்ளது கயானா நாடு. கயானா நாட்டின் முதலாவது முஸ்லிம் அதிபர் என்ற பெருமையைப் பெற்றவர் இர்பான் … Read more

மக்களவை தேர்தலில் ‘இவர்களுக்கு’ வாக்களியுங்கள்- விஜய் ஆண்டனி வேண்டுகோள்!

Vijay Antony : மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என நடிகர் விஜய் ஆண்டனி திருச்சியில் பேட்டியளித்திருக்கிறார். 

VCK: விசிக கேட்ட சின்னத்தை கொடுத்த தேர்தல் ஆணையம்… அதுவும் 2 தொகுதிகளுக்கும்!

VCK Party Symbol: இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது. 

Hardik Pandya: ஹர்திக் பாண்டியா மீதான கடும் எதிர்ப்பு… அஸ்வின் சொன்ன அசத்தல் அட்வைஸ்!

Mumbai Indians Captain Hardik Pandya News: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 10 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் இதுவரை தோல்வியடையாத நிலையில், டெல்லி, மும்பை அணிகள் இதுவரை இன்னும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. லக்னோ அணி தனது முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், … Read more

Daniel Balaji: "இளவயது மரணங்களின் வேதனை…" – கமல் முதல் அதர்வா வரை; இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்!

`காக்க காக்க’, `வேட்டையாடு விளையாடு’, `பொல்லாதவன்’, `பைரவா’, `வடசென்னை’, `பிகில்’ உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த டேனியல் பாலாஜியின் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது மறைவிற்குத் திரை பிரபலங்கள் பலரும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச்… … Read more

50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணமாக எடுத்துச் செல்வதில் நடைமுறை சிக்கல் ஏற்படுவதாக சத்யபிரதா சாகு வேதனை… தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்…

தேர்தல் நேரத்தில் 50000 ரூபாய்க்கு மேல் பணமாக எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் பல்வேறு நடைமுறை சிக்கல் எழுந்து வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அவர் கடிதம் எழுதியிருப்பதை அடுத்து பணமாக எடுத்துச் செல்லும் உச்சவரம்பு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானப் பணிகள், திருமண செலவு, சுற்றுலா செல்லும் பொதுமக்கள் ஆகியோர் தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட … Read more

ஏழு தமிழ்ப் படங்களை பின்னுக்குத் தள்ளிய 'காட்சில்லா x காங்'

தமிழ்ப் படங்களுக்கான சோதனை இந்த வருடத்தின் மூன்றாவது மாத முடிவிலும் தொடர்கிறது. நேற்று மார்ச் 29ம் தேதி ஏழு நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின. அந்தப் படங்களில் ஒரு சில படங்களுக்கு நல்ல விமர்சனங்களும் கிடைத்துள்ளன. ஆனாலும், அப்படங்களைப் பார்க்க மக்கள் தியேட்டர்களுக்கு ஆர்வத்துடன் வரவில்லை என தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், நேற்று வெளியான ஹாலிவுட் படமான ''காட்சில்லா x காங் – த நியூ எம்பயர்' படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதாம். குறிப்பாக … Read more