டேனியல் பாலாஜி மரணம்.. இரங்கல் கூட தெரிவிக்காத விஜய், தனுஷ்.. இதுக்கு கூட நேரமில்லையா!

சென்னை: வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், பெரிய நடிகர்களான தனுஷ் மற்றும் விஜய் இதுவரை இரங்கல் கூட தெரிவிக்காது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. கமல், விஜய், தனுஷ், சிம்பு உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில்

தொடரும் கட்சி தாவல்கள்… பாஜக-வில் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சிவ்ராஜ் பாட்டீல் மருமகள்!

மகாராஷ்டிராவில் ஏற்கனவே காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் பாஜக-வில் சேர்ந்துவிட்டார். இது தவிர மும்பை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாபா சித்திக் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸிலும், மிலிந்த் தியோரா முதல்வர் ஷிண்டேயின் சிவசேனாவிலும் சேர்ந்து இருக்கின்றனர். அடுத்தடுத்து காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேயின் மகளையும் பா.ஜ.க தங்களது பக்கம் இழுக்க முயன்றதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் சேரவில்லை. இந்நிலையில் … Read more

“அன்று தினகரன் வீட்டுக் காவல் நாய்… இன்று நாங்கள் சீறும் சிங்கங்கள்!” – ஆர்.பி.உதயகுமார்

மதுரை: “ஜெயலலிதா இருக்கும்வரை டிடிவி தினகரனை பார்த்து பயந்தது உண்மைதான். டிடிவி தினகரன் வீட்டு காவல் நாயாக இருந்தோம். இப்போது சீறும் சிங்கங்களாக மாறிவிட்டோம்” என்று வாடிப்பட்டியில் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வாடிப்பட்டியில் ஆர்.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 15 ஆண்டுகளாக தேனி பக்கமே எட்டிப் பார்க்காதவர் டிடிவி தினகரன். ஜெயலலிதாவால் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து 10 ஆண்டுகள் ஒதுக்கிவைக்கப்பட்டவர் அவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் தலைகாட்ட ஆரம்பித்தார். ஆர்.கே.நகரில் 20 … Read more

ராஜ்நாத் சிங் தலைமையில் தேர்தல் அறிக்கை குழு அமைத்தது பாஜக

புதுடெல்லி: கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவைத் தேர்தல் 2024-க்கான தேர்தல் அறிக்கைக் குழுவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா அறிவித்துள்ளார். அதன்படி, தேர்தல் அறிக்கையின் குழுவின் தலைவராக ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்பாளராக நிர்மலா சீதாராமனும், இணை ஒருங்கிணைப்பாளராக பியூஷ் கோயலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவில் … Read more

பாஜகவின் அடிமடியிலேயே கைவைத்த கமல்! ஈரோட்டில் பின்பாயிண்ட் பேச்சு – பாஜக ரியாக்ஷன்?

ஈரோட்டில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழர்களின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பிஞ்சிபோன செருப்பு! அண்ணாமலை விமர்சனம்…

சென்னை: தமிழர்களின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பிஞ்சிபோன செருப்பு என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதற்கு கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் பிரசாரம் அனல்பறந்து வருகிறது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என 4முனை போட்டி நிலவும் சூழலில் கூட்டணி கட்சிகளை ஆதரித்து, கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு,  தமாகா சார்பில் வேணு கோபால்,  … Read more

ஆண்ட்ரியா படத்தை திரையிட கோர்ட் தடை

ஆண்ட்ரியா நடித்து முடித்துள்ள படம் 'கா : தி பாரஸ்ட்'. நாஞ்சில் என்ற புதுமுகம் இயக்கி உள்ள இந்த படத்தில் ஆண்ட்ரியா தவிர சலிம் கோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுந்தர்.சி பாபு இசை அமைத்திருந்தார். ஷாலம் ஸ்டூடியோ தயாரித்திருந்தது. நீண்டநாள் தயாரிப்பில் இருந்த இந்த படம் நேற்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தை தடை செய்ய வேண்டும் என்று சன் பிசினஸ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு … Read more

டேனியல் பாலாஜி மறைவு.. சினிமா அவரை சரியாக பயன்படுத்தல.. சேரன் வேதனை!

சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் குறித்து பலரும் நெகிழ்ந்து வரும் நிலையில் இயக்குநர் சேரன், அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற பெரிய கனவோட பெரிய ஆர்வத்தோட இருந்தவர் டேனியல் பாலாஜி, அவரை சினிமா சரியாக பயன்படுத்தல என்றார். மறைந்த

“முதல்வர் அளவுக்கு உயர்ந்துவிட்ட தம்பி ஸ்டாலினுக்கு இது தெரியாதது வருத்தமளிக்கிறது” – ராமதாஸ் பதில்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த ஆண்டு தனது மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை சாத்தியமாக்கி, அதன் தரவுகளை வெளியிட்டார். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திய முதல் மாநிலமாக பீகார் அரசு இதை சாத்தியமாக்கியதையடுத்து, தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் எனக் கூறிவரும் காங்கிரஸ், அதைத் இந்த மக்களவைத் தேர்தலில் தனது வாக்குறுதியாகவே அளித்திருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக, தாங்கள் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று காங்கிரஸ் உறுதியளித்துவருகிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு இதேபோல், தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு … Read more

கரூர் | வேட்பாளர் இல்லாமல் அதிமுக பிரச்சாரம்: ஆரத்திக்கு ரூ.50 கொடுத்ததால் பெண்கள் வாக்குவாதம்

கரூர்: கரூரில் அதிமுக வேட்பாளரை அழைத்து வராமல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரச்சாரம் செய்தார். அவர் சென்ற சில நிமிடங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாக தாம்பூலத் தட்டுடன் காத்திருந்த பெண்களுக்கு 50 ரூபாய் மட்டும் வழங்கியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனால், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கரூர் அதிமுக சார்பில் வீரராக்கியம் பகுதியில் … Read more