AI தொழில்நுட்பம் மூலம் மோசடி: மும்பையில் மகன்/மகள் பேசுவதுபோல் பெற்றோரிடம் பேசிபணம் பறிப்பு!

டிஜிட்டல் துறையில் ஏ.ஐ. தொழில் நுட்பம் புதிய புரட்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. அதே நேரம் மோசடி பேர்வழிகளும் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்யும் வேலையில் இறங்கி இருக்கின்றனர். மும்பையை ரஞ்சித் என்பவரின் நம்பருக்கு மர்ம நம்பரில் இருந்து வாட்ஸ் ஆப் மூலம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தன்னை சி.பி.ஐ.அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டு, `உங்களது மகனை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்து வைத்திருக்கிறோம். வழக்கு பதிவு செய்ய இருக்கிறோம். அப்படி … Read more

பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தது ஏன்? – தடா பெரியசாமி விளக்கம்

சென்னை: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பாஜக மாநில பட்டியலின அணி தலைவர் தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்தார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19-ந்தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், பாஜக மாநில பட்டியலின அணி தலைவர் தடா பெரியசாமி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவரது முன்னிலையில் அதிமுகவில் … Read more

மதுபான கொள்கை வழக்கு: டெல்லி போக்குவரத்து அமைச்சரிடம் அமலாக்கத் துறை விசாரணை 

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து டெல்லியின் போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலோட் இன்று (சனிக்கிழமை) விசாரணைக்கு நேரில் ஆஜராகினார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கைலாஷுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. டெல்லியின் நஜஃபகர் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் கைலாஷ், கடந்த 2021 – 22ல் உருவாக்கப்பட்டு, தற்போது கைவிடப்பட்டிருக்கும் மதுபான … Read more

Daniel Balaji :தனது இறப்பை முன்கூட்டியே கணித்த டேனியல் பாலாஜி! என்ன சொன்னார் தெரியுமா?

Daniel Balaji Death Latest News In Tamil : தமிழ் திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி, மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் சோகமடைந்துள்ளனர். இவர், தனது இறப்பு குறித்து முன்கூட்டியே பேசியுள்ளார். என்ன கூறியிருக்கிறார் தெரியுமா

பாஜகவில் இருந்து விலக அந்த 3 பேர் தான் காரணம்! அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி குற்றச்சாட்டு

Tada Periyasamy left the BJP joined AIADMK: பாஜகவில் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்த தடா பெரியசாமி அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

9 ஆண்டுகளாக ஆர்சிபியை துரத்தும் சோகம்! பெங்களூருவில் கொடி பறக்கவிடும் கேகேஆர்

ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். அதற்கு காரணம் ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி, கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கவுதம் காம்பீர். இருவரும் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். கம்பீர் சீனியர் என்பதால் ஜூனியர் விராட் கோலியிடம் மரியாதை கொடுக்க வேண்டும், தனக்கு கீழ் தான் நீ என்கிற தொனியிலேயே அவரை ட்ரீட் செய்வார். மரியாதை வேண்டுமானால் கொடுக்கிறேன், … Read more

Daniel Balaji: "அவர் கண்கள் பார்வையற்ற ஏழைகளுக்குப் பயன்படும்" – டேனியல் பாலாஜியின் தம்பி உருக்கம்!

டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமான சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ‘சித்தி’ என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் நடிகராக அறிமுகமானவர் டேனியல் பாலாஜி. அதன் பிறகு, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வட சென்னை, பிகில் உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமாகியுள்ளார். இவருக்கு வயது 48. நெஞ்சுவலி ஏற்பட்டதும் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். காக்க … Read more

ஜனநாயகம் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் கோருகிறது, வரி பயங்கரவாதத்தை அல்ல! ப.சிதம்பரம்…

டெல்லி: ஜனநாயகம் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் கோருகிறது, வரி பயங்கரவாதத்தை அல்ல, இதற்கு மக்கள் தேர்தலில் பதில் தருவார்கள் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் காட்டமாக தெரிவித்து உள்ளார். நாட்டின் பிரதான எதிா்க்கட்சியாக உள்ள காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் தேர்தலுக்கு முன்பு மத்திய பாஜக அரசால் முடக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்கும் வேலை என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கை … Read more

இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா!

கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் பாலா. சமீப காலமாக திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வரும் பாலா, இன்னொரு பக்கம் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது, முதியோர் இல்லங்களுக்கு உதவுவது, மலைக்கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுப்பது என்று பலதரப்பட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், மருத்துவமனை கட்டி அதில் ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க … Read more

Inspector Rishi Review: குலைநடுங்க வைக்கும் ’வனரட்சி’ தேவதை.. இன்ஸ்பெக்டர் ரிஷி விமர்சனம் இதோ!

சென்னை: ஜே.எஸ். நந்தினி இயக்கத்தில் நவீன் சந்திரா, சுனைனா, கண்ணா ரவி, குமரவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் புத்தம் புதிய ஹாரர் மிஸ்ட்ரி வெப்சிரீஸ் தான் இன்ஸ்பெக்டர் ரிஷி. 10 எபிசோடுகளுடன் நீண்ட நெடிய வெப்சீரிஸாக வந்திருந்தாலும் ஒவ்வொரு எபிசோடும் அடுத்தடுத்த எபிசோடுகளை ஒரே மூச்சில் பார்க்க வைத்து விடுகிறது.