வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை டிஜிட்டல் மயமாக்கப்படும் என்ற நற்செய்தியுடன் மாத்தளை சென்ற ஜயகாமு ஸ்ரீலங்கா இன்று இஸ்ரேலிய தொழில் வாய்ப்புகளுடன் வவுனியாவிற்கு வருகை தந்துள்ளது.

உலகம் தொடர்ந்து அபிவிருத்தியடைந்து வரும் நிலையில், தீர்வுகளை விரைவில் மேற்கொள்ள வேண்டிய நிலை நாட்டில் உள்ள பலருக்கு நம்பிக்கைக் கலங்கரை விளக்காக மாறியுள்ளது. நாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையில், தொழிலாளி தனது வேலைத்தளத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும், அதை தீர்வு காண்பதற்கு இடையிலான தாமதம் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகும். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரஅவர்களின் நடைமுறைப்படுத்தப்பட உள்ள டிஜிட்டல் முறையானது வெளிநாட்டிற்கு செல்லும் இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என அமைச்சர் … Read more

மகாராஷ்டிரா: முதல் கட்ட தேர்தலில் முற்றிலும் புதுமுகங்களை கொண்டு பாஜக-வை எதிர்கொள்ளும் காங்கிரஸ்!

வரும் மக்களவைத் தேர்தலில் எப்போதும் இல்லாத வகையில் மகாராஷ்டிராவில் ஐந்து கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக விதர்பாவில் இருக்கும் நாக்பூர், ராம்டெக், பண்டாரா, சந்திராப்பூர், கட்சிரோலி ஆகிய தொகுதியில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் மூன்று கட்சியும், பா.ஜ.க கூட்டணியில் 3 கட்சியும் இடம் பெற்று இருந்தாலும் முதல் கட்டத்தேர்தல் மட்டும் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இடையே மட்டும் பிரதானமாக நடக்கிறது. ஐந்து தொகுதியில் சிவசேனா ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. தேசியவாத காங்கிரஸ் … Read more

“வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு சமூகநீதி குறித்து ஸ்டாலின் பாடம் நடத்தட்டும்” – ராமதாஸ்

சென்னை: வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு சமூகநீதி குறித்து பாமகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாடம் நடத்தட்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சமூகநீதி குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொள்வாரா? அதற்கான உத்தரவாதத்தை நரேந்திர மோடியிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சி பெற்றிருக்கிறதா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வினா எழுப்பியிருக்கிறார். மண்டல் ஆணையத்தின் அறிக்கையை பத்தாண்டுகள் கிடப்பிலும், அதற்கு முந்தைய காகா கலேல்கர் ஆணைய … Read more

கமல்நாத் மகன் நகுல்நாத் சொத்து மதிப்பு ரூ.697 கோடி

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல் நாத். மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரே காங்கிரஸ் எம்.பி. இவர்தான். கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 29 இடங்களில், 28 இடங்களில் பாஜக வென்றது. சிந்த்வாரா தொகுதியில் மட்டும் நகுல் நாத் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் இவர் இதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் வேட்பு மனுவில், தனது சொத்து மதிப்பு ரூ.697 கோடி என தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் இவரது சொத்து … Read more

Daniel Balaji : இறந்த பின்பும் டேனியல் பாலாஜி செய்த நல்ல காரியம்..! என்ன தெரியுமா?

Daniel Balaji Death Latest News : பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி! அண்ணாமலை மீது அதிருப்தி

பாஜகவில் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்த தடா பெரியசாமி அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.  

வயநாட்டில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர்மீது 242 கிரிமினல் வழக்குகள்….

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் தேர்தல் களம் அனல்பறக்கத் தொடங்கி உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து வயநாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்  சுரேந்திரன் மீது 242 கிரிமினல் வழக்குகள் உள்ளது. இதை அவரே தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதி பல ஆண்டுகளாக காங்கிரஸ் கோட்டையாக திகழ்கிறது. கடந்த 2019ம் ஆண்டில் ராகுல் காந்தி  இங்கு போட்டியிட்டு எம்.பி.யான நிலையில், தற்போது 2வது முறையாக மிண்டும் போட்டியிடுகிறார். இங்கு, அவரை எதிர்த்து,    இண்டியா … Read more

மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர்

இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கில் 'கேம் சேன்ஞ்சர்', தமிழில் 'இந்தியன் 2' என்ற இரு படங்களிலும் பிசியாக இருக்கிறார். இரண்டுமே 300 கோடிக்கும் கூடுதலான பட்ஜெட்டில் தயாராகிறது. இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்ட ஷங்கர் அதற்கு பிந்தைய பணிகளில் ஈடுபட்டு வந்தார். அற்போது அந்த பணிகளுக்கு சின்ன கேப் விட்டு மகளின் திருமணத்தில் பிசியாகி விட்டார். ஷங்கருக்கு இரண்டு மகள்கள்; இளைய மகள் அதிதி தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கு புதுச்சேரியை … Read more

ஆடுகளம் படத்தில் அந்த மெயின் ரோலில் டேனியல் பாலாஜி நடிக்க வேண்டியதா?.. அவர் மறுக்க காரணம் என்ன?

சென்னை: 1975ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி சென்னையில் பிறந்த டேனியல் பாலாஜி நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கே அவருக்கு சிபிஆர் சிகிச்சை அளித்தும் அவர் உயிர் பிழைக்கவில்லை. டேனியல் பாலாஜியின் மறைவு சினிமா உலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நம்பியார் போலவே வில்லனாக இருந்தாலும்

`நாடு காக்க வந்துள்ளேன் என்று தொடக்கத்தில் சொன்னபோது நானே கூட நம்பிவிட்டேன்!’- மோடி குறித்து கமல்

ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில், “நாட்டைக் காக்கும் உரிமை தமிழர்களுக்கும் உள்ளது. தேசிய நீரோட்டத்தில் கலக்காத திராவிடக் கூட்டம் இது என சிலர் பேசிக் கொள்கிறார்கள். வடநாட்டில் யாராவது காமராஜர், சிதம்பரம் என்று பெயர் வைத்துள்ளார்களா? ஆனால், இங்கு காந்தி, நேரு, சுபாஷ்சந்திரபோஸ் என்று தங்கள் குழந்தைகளுக்கு எத்தனை பேர் பெயர் வைத்திருக்கிறார்கள். நீங்கள் இப்போதுதான் … Read more